திண்டிவனம் தீர்த்தக்குளத்தில் ஆகாய தாமரை செடி அகற்றப்படுமா?
ADDED :4171 days ago
திண்டிவனம்: தீர்த்தக்குளத்தில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டிவனம் சிவன் கோவில் எதிரில் தீர்த்தக்குளம் உள்ளது. இந்த குளம் ஒரு காலத்தில் திண்டிவனம் நகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்தது. காலப் போக்கில் குளத்தை சரியாக பராமரிக்கவில்லை. தீர்த்தக் குளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, குளம் முழுவதும் ஆகாய தாமரைச் செடிகள் வளர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. தீர்த்தக்குளத்தில் உள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றி குளத்தை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.