ஜம்புலிபுத்தூர் நரசிங்க பெருமாள் கோயில் தேரோட்டம்
ADDED :4193 days ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் சித்திரை திருவிழா கடந்த மே 4ஆம் தேதிகொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி சிம்மம், கருடன் மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்தனர்.