மகாலட்சுமி குபேரன் கோவிலில்.. சித்ரா பவுர்ணமி ஹோமம்
ADDED :4166 days ago
விழுப்புரம்: விழுப்புரம் மகாலட்சுமி குபேரன் கோவிலில் சித்ரா பவுர்ணமி ஹோமம் நடந்தது.விழுப்புரம் திருநகர் மகாலட்சுமி குபேரன் கோவிலில் நேற்று சித்ரா பவுர்ணமி ஹோமம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு கோபூஜை, விஸ்வரூபம் நடந்தது. 7:30 மணிக்கு புண்ணியாவாகனம், பகவத் அனுக்ரகம், மகா சங்கல்பம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி நடந்தது. 10 மணிக்கு மகாபூர்ணாஹூதி, மகா திருமஞ்சனம் மற்றும் கடம் புறப்பாடு நடந்தது. விசேஷ அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.