உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜுலை 4-ம் தேதி சிவன்மலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்

ஜுலை 4-ம் தேதி சிவன்மலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்

காங்கயம் :  திருப்பூர் மாவட்டம், காங்கயம்  சிவன்மலை முருகன் மலை கோவில் உள்ளது.  இந்தக் கோவிலில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தக் கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாத நிலையில், தற்போது சுமார் ரூ.2 கோடி செலவில் புதிதாக ராஜகோபுரம், மண்டபம் உள்ளிட்ட திருப்பணிகள், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் துவங்கி தற்போது நிறைவு பெற்றுள்ளன. வரும் ஜூலை 4--ம் தேதி கும்பாபிஷேகம் நடந்த  ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !