பழநிவைகாசி விசாகவிழா: ஜூன் 5 ல் கொடியேற்றம்!
பழநி: தைப்பூசம், பங்குனி உத்திரவிழாவை தொடர்ந்து, பழநியில் முக்கிய நிகழ்ச்சியான, வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 5 முதல் 14 வரை, நடக்கிறது. பழநி வைகாசிவிசாகத் திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூன் 5, காலை 8.30 முதல் 9.30 மணிக்குள் கொடியேற்றத்துடன், துவங்கி தொடர்ந்து பத்துநாட்கள் நடக்கிறது. விழாவின், ஆறாம் நாளான ஜூன் 10, மாலை 6.30 முதல் 8 மணிக்குள், முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழா நாட்களில் சுவாமி தங்கமயில், வெள்ளி காமதேனு, தங்ககுதிரை உள்ளிட்ட, வாகனங்களில் வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஏழாம்நாள் ஜூன் 11ல், வைகாசி விசாகத்தன்று, மலைக்கோயில் சன்னதி அதிகாலை 4 மணி திறக்கப்படும். பெரியநாயகியம்மன் கோயில் தேர்நிலையிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பாடாகி, நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும்.