உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜயோக பத்ரகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!

ராஜயோக பத்ரகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!

காரைக்கால்: கோவில்பத்து திரௌபதி அம்மன் ராஜயோக பத்ரகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. காரைக்கால் கோவில்பத்து  புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள திரௌபதி அம்மன் ராஜயோக பத்ரகாளியம்மன் கோவில் தீமிதி விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் இரவு அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று தீ மிதி திருவிழா நடந்தது. பகல் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு கோவிலுக்கு எதிரே அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் பக்தர்கள் சிலர் குழந்தைகளுடனும், காவடியுடன் தீக்குழியில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !