சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் கொடியேற்றம்!
ADDED :4191 days ago
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா, கொடியேற்றத்துடன் நேற்று இரவு துவங்கியது. ஜூன் 18 வரை 17 நாட்கள் விழா நடக்கிறது. நேற்று இரவு 7 மணிக்கு பூஜாரி கணேசன், அம்மன் உருவம்பொறித்த கொடியுடன் ரதவீதி சுற்றி கோயிலுக்கு வந்தார். பின், கொடியேற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கம்பத்தில் சந்தனம் தெளித்தனர். அம்மனுக்கு காப்பு கட்டிய பின், பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் துவங்கினர். நிர்வாக அதிகாரி ராஜேந்திரகுமார், ஊழியர்கள் சுந்தர், தர்மராஜ், பூபதி ஏற்பாடுகளை செய்தனர்.