பெரம்பலூர் செல்வமாரியம்மனுக்கு அக்னி சட்டி ஏந்துதல் நிகழ்ச்சி!
பெரம்பலூர்: பெரம்பலூர் ஆலம்பாடி சாலையிலுள்ள செல்வமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடங்கள், அக்னிசட்டிகளை ஏந்திச்சென் றனர். பெரம்பலூர் நகராட்சியின் 1வது வார்டு ஆலம்பாடி சாலையிலுள்ள புதிய காலனி பகுதியில் அருள்மிகு செல்வமாரியம்மன் திருக்கோயில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் திருவிழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தெப்பக்குளத்தின் நடுவிலியிருந்து உடுக்கை அடித்து சாமி குடியழைக்கப்பட்டது. இதனையடுத்து பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி ஏந்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும் பக்தர்கள் பால்குடங்களையும், அக்னிசட்டிகளையும் ஏந்திச்சென்றனர். உடலில் அலகுகளைக் குத்திக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். ஆலம்பாடி சாலையிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் அரசு மருத்துவமனை, பெரிய கடைவீதி, பூசாரித்தெரு, பெரியார் சிலை, பழைய பஸ் ஸ்டாண்டு வழியாக மீண்டும் கோயிலை சென்றடைந்தது. ஊர்வலத்தில் பெரம்பலூர், ஆலம்பாடி, அரணாரை, துறைமங் கலம், சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.