அய்யப்பன் கோவிலில் கட்டுமான பணி துவக்கம்!
ADDED :4157 days ago
திருவெண்ணெய்நல்லுõர்: திருவெண்ணெய்நல்லுõரில் அய்யப்பன் கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. திருவெண்ணெய்நல்லுõர் பஸ் நிலையம் எதிரில் அய்யப்பா சேவா சங்கம் சார்பில், அய்யப்பன் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. சங்க தலைவர் சுந்தரம் தலைமை தா ங்கினார். ஸ்பதிகள் செங்கற்களை வைத்து, திருப்பணியை துவக்கினர். சங்க நிர்வாகிகள் சரவணக்குமார், சோமசுந்தரம், திருப்பதி, பாலசுப்ரமணி யகுருஜி, சுப்ரமணியன், வெங்கட்ராமசுரேஷ், மூர்த்தி, கலியமூர்த்தி, அய்யனார், சுந்தரமூர்த்தி, ராமச்சந்திரன், முருகன், சந்திரன், துரை, குமரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.