உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேசம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.32 லட்சம்

தேசம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.32 லட்சம்

நகரி: நகரி, தேசம்மன் கோவிலில், பக்தர்கள் 2.32 லட்சம் ரூபாய் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, டி.ஆர்.கண்டிகை கிராமத்தில், தேசம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை, நேற்று முன்தினம் ஊழியர்களால் கணக்கிடப்பட்டது. இதில், 2,32,077 ரூபாய் ரொக்கம், 14.5 கிராம் தங்கம், 40 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக கிடைத்துள்ளன. மேற்கண்ட தகவலை, கோவில் நிர்வாக அதிகாரி முனிகிருஷ்ணா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !