பாதரக்குடி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
காரைக்குடி :காரைக்குடி அருகே பாதரக்குடி முத்துமாரியம்மன், மகா கணபதி, கல்யாண நவக்கிரக கோயில் கும்பாபிஷேக விழா, கடந்த 4-ம் தேதி, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 5-ம் தேதி இரவு 8.30 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று காலை 7.15 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், 9.15 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனையும், 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. பிள்ளையார்பட்டி பிச்சைகுருக்கள், கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். காலை 10.15 மணிக்கு அம்பாளுக்கு மகாஅபிஷேகமும், அனுக்கிர விநாயகர், கல்யாண நவக்கிரகருக்கு மகாஅபிஷேகமும் நடந்தது. பொன்னம்பல அடிகள், கயிலை மணி ரவீந்திர சுவாமிகள், துலாவூர் ஆதீனம் ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள், காரைக்குடி நகராட்சி தலைவர் கற்பகம், முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன், மலர் ஆஸ்பத்திரி இயக்குனர் நித்யா ராமமூர்த்தி, தொழிலதிபர்கள் சுப்பிரமணியராஜா, பாலா பங்கேற்றனர்.