உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எது சொன்னால் புண்ணியம்?

எது சொன்னால் புண்ணியம்?

மதுரை:மதுரை விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயில் கும்பாபிஷேக தொடர் சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமன் ராம அவதாரம் என்ற தலைப்பில் பேசியதாவது: தர்மத்தை நிலைநாட்ட பகவான் அவதாரம் செய்தார். காமம், கோபத்தை நாம் வெல்ல ராமநாமாவை சொல்ல வேண்டும். ராமா என்ற இரண்டு எழுத்தை உச்சரிப்போமானால் நாராயணன் நாமாவையும், சிவ நாமாவையும் சொன்ன புண்ணியம் கிடைக்கும்.நம்மிடையே உள்ள ராவணன் என்ற காமம், கும்பகர்ணன் என்ற உறக்கம், இந்திரஜித் என்ற கர்வம் நம்மிடம் இருந்து விலக வேண்டும் எனில் ராமா நாமாவை உச்சரிக்க வேண்டும். இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிரும் ராமநாமாவை சொன்னால் உடலை விட்டு பாவம் வெளியேறும். பாவம் வெளியேறினாலே பெரிய புண்ணியம். நன்மையோடு கூடிய செல்வம், இறந்த பின் மோட்சம் ராமநாமம் சொல்ல கிட்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !