உலக நன்மைக்காக சுதர்சன ஹோமம்!
ADDED :4166 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழாவை முன்னிட்டு உலகநன்மைக்காக சுதர்சன ஹோம பூஜை நடந்தது. சக்கரத்தாழ்வார் சுவாமிக்கு ரகுராமபட்டர் அபிஷேக, தீபாராதனை காட்டி பூஜை செய்தார். உலகநன்மை, மழைவேண்டி வரதராஜ்பண்டிட் முன்னிலையில் சுதர்சன ஹோமம் பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரகுமார், ஊழியர் பூபதி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.