அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா!
ADDED :4166 days ago
மயிலம்: கூட்டேரிப்பட்டு அடுத்த கீழ்எடையாளம் மலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனித் திருமஞ்சன உற்சவம் நடந்தது. காலை 6 மணிக்கு கோவில் நடை திறந்து வழிபாடுகள் நடந்தது. காலை 11 மணிக்கு மூலவருக்கு நறுமணப் பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆர்த்தநாரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மயிலம், திண்டிவனம், கூட்டேரிப்பட்டு, ரெட்டணை போன்ற ஊர்களிலிருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகி முனுசாமி அடிகளார் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை பகவதியம்பாள் பீட அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.