உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்பியன்மாதேவி கோவில்களில் நாளை அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

செம்பியன்மாதேவி கோவில்களில் நாளை அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

உளுந்தூர்பேட்டை: செம்பியன்மாதேவி கிராமத்தில் உள்ள மகா கணபதி, சீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள், திரவுபதி அம்மன் கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, மகா சங்கல்பம், தன பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை ஹோமம், மாலை 5 மணிக்கு அங்குரார்பணம், யாக சாலை பூஜை, தீபாராதனை நடந்தது. இன்று காலை 8.30 மணிக்கு வித்யா கணபதி பூஜை, புண்யாவாசனம், துவாரபூஜை, மாலை 5.30 மணிக்கு லட்சுமி கணபதி பூஜை, வேதசார்ச்சனை, மூலிகை திரவிய ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், தீபாராதனை நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு சக்தி கணபதி பூஜை, புண்யாக வாசனம், வேதிசார்ச்சனை பீம்பசுத்தி, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, காலை 9 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடும் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு மகா கணபதி, சீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள், மகா மாரியம்மன், மகா காளியம்மன், சபரிவாரகோவில் விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 9.45 மணிக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், 10 மணிக்கு திரவுபதியம்மன் கோவில் விமானம் கடம் புறப்பாடு, 10.30 மணிக்கு சபரிவாரகோவில் விமான கும்பாபிஷேகம், 10.45 மணிக்கு மூலஸ்தான கும்ப அபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !