வில்லியனுார் வரதராஜப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்!
ADDED :4167 days ago
வில்லியனுார்: வில்லியனுார் தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இக்கோவிலில் 11ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 3ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது.நேற்று 7ம் நாள் விழாவில், காலை 8.00 மணிக்கு சுவாமிக்கு மஞ்சள் நீர் உற்சவம், பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், உள் புறப்பாடு நடந்தது. இரவு 7.00 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.