நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்!
ADDED :4118 days ago
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த ஜூலை 2 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் தீபாராதனை, அலங்காரங்கள், சுவாமி அம்பாள் வீதி உலா நடந்தன. இரவில் கோயில் வளாகத்தில் இசைநிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள் நடந்தன.இன்று 9 ம் திருநாளில் தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி, காலை 4:09 க்கு மேல் 4:29 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருளுகிறார். காலை 8:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை தீர்த்தவாரி நடக்கிறது.