உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழுமலையான் தரிசனம்: நாளை 5 மணி நேரம் ரத்து!

ஏழுமலையான் தரிசனம்: நாளை 5 மணி நேரம் ரத்து!

திருப்பதி: திருமலை ஏழுமலையான் தரிசனம், நாளை ஐந்து மணிநேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமலை ஏழுமலையானுக்கு, வரும், 17ம் தேதி, ஆனி வார ஆஸ்தானம் உற்சவம் நடக்கிறது. இதற்காக, கோவிலை தூய்மை செய்யும், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நாளை நடக்க உள்ளது.அதனால், நாளை காலை, 6:00 முதல், 11:00 மணி வரை ஏழுமலையான் தரிசனத்தை, தேவஸ்தானம் ரத்து செய்துஉள்ளது. காலை, 11:00 மணிக்குப் பின், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். நாளை, ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !