நாகூர் தர்காவில் சிறப்பு இப்தார்!
ADDED :4108 days ago
நாகப்பட்டினம்: நாகூர் தர்காவில் சிறப்பு இப்தார் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நாகை அடுத்த நாகூரில் ஷாஹூல் ஹமீத் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. தர்காவில் யாத்ரீகர்களுக்கு அருள்பாலித்து வரும் ஷாஹூல் ஹமீத் பாதுஷா நாயகத்தின் ஆன்மிக குருவான முகமது கவுஸ் நினைவு நாளை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, சிறப்பு இப்தார் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.தர்கா பரம்பரை டிரஸ்டி கலிபா மஸ்தான் சாகிப்,தர்கா ஆதினம் ஹாஜா ஆகியோர் சிறப்பு இப்தார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியில், சர்வ மதங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.