உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 27 லட்சம் நெய் தீபம்!

ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 27 லட்சம் நெய் தீபம்!

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், 27 லட்சம் நெய் தீபம் விற்பனை, செய்யப் பட்டு உள்ளன. ஸ்ரீபெரும்புதுாரில், பழமையான ஆதிகேசவப் பெருமாள்  மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில்,  திருவாதிரை உற்சவம், சித்திரை மாதம் பிரம்மோற்சவம், நவராத்திரி உற்சவம், ஆகிய தினங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து  செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு, கோவிலில் நிர்வாகம், கோடி நெய் தீபம் ஏற்றும் திட்டத்தை, அறிமுகப்படுத்தி, ஒரு நெய்  தீபத்தை, இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்தது. அதன்படி, கோவிலுக்கு வரும் பக்தர்கள், நெய் தீபம் ஏற்றி, வழிப்பட்டு வருகின்றனர். இதுவரை,  கோடி நெய் தீபம் திட்டத்தில், 27 லட்சத்து 30 ஆயிரம் நெய் தீபங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக, கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !