உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தான்தோன்றிமலை கோவிலில் ஏ.ஸி., இயந்திரம் துவக்கம்

தான்தோன்றிமலை கோவிலில் ஏ.ஸி., இயந்திரம் துவக்கம்

கரூர்: தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண ஸ்வாமி கோவிலில், புதிதாக அமைக்கப்பட்ட குளிர்சாதன இயந்திரம் துவக்கி வைக்கப்பட்டது. கரூர் தாந்தோணிமலையில் புகழ் பெற்ற கல்யாண வெங்கடரமண ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம், வரும், 7ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது கோவில் திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில், கோவிலில் பக்தர்கள் நலன் கருதி, 16 டன் கொண்ட குளிர்சாதன இயந்திரம் புதிதாக அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி தலைமை வகித்தார். கோவில் செயல் அலுவலர் முல்லை வரவேற்றார். நிகழ்ச்சியில், கரூர் நகர் மன்ற தலைவர் செல்வராஜ், கமிஷனர் வரதராஜ், இன்ஜினியர் புண்ணியமூர்த்தி, நகர அமைப்பு அதிகாரி கோபாலகிருஷ்ணன், கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன், தாந்தோணி ஒன்றிய குழு தலைவர் ராமலிங்கம், க.பரமத்தி ஒன்றிய செயலாளர் மார்க்கண்டேயன், இளைஞர் அணி தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !