உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் ராஜகணபதி கோவில்: செப்.,4ல் கும்பாபிஷேக விழா

நாமக்கல் ராஜகணபதி கோவில்: செப்.,4ல் கும்பாபிஷேக விழா

நாமக்கல்: நாமக்கல் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ராஜகணபதி கோவிலில், செப்டம்பர், 4ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. நாமக்கல், டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே சவுராஷ்டிரா சமூகத்துக்கு சொந்தமான ராஜகணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிஷேக விழா நடத்தி, 12 ஆண்டுகள் முடிவடைந்ததை தொடர்ந்து, ராஜகணபதி, தட்சிணாமூர்த்தி, லட்சுமி நாராயணன், விஷ்ணுதுர்க்கை, நவக்கிரக சிலைகள் (சக்கரத்தாழ்வார், ராஜமுருகன் நூதன சிலை பிரதிஷ்டை செய்து) மிகுந்த பொருட்செலவில், திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, செப்டம்பர், 4ம் தேதி, கோவில் கும்பாபிஷேகம் செய்ய, நிர்வாகிகள் முடிவு செய்தனர். விழாவை முன்னிட்டு, இன்று (செப்., 2) காலை, 7.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன், நிகழ்ச்சி துவங்குகிறது. தொடர்ந்து, புண்யாகவாசம், துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. செப்டம்பர், 3ம் தேதி, பகல், 12 மணிக்கு இரண்டாம் கால யாகம், மாலை, 4 மணிக்கு கோபுர கலசம் வைத்தல், இரவு, 9.30 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. செப்டம்பர், 4ம் தேதி, காலை, 7.45 மணிக்கு கடம் புறப்பாடு, 8.45 மணிக்கு விமான கோபுரத்துக்கு கும்பாபிஷேகம், 8.55 மணிக்கு பரிவார சகித ராஜகணபதி ஸ்வாமிக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து, மகா அபிஷேகம், அலங்காரம், ஸ்வாமி தரிசனம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, சவுராஷ்டிரா விப்ர சபா நிர்வாகக்குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !