உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தடைநீக்கும் தல!

தடைநீக்கும் தல!

படிப்புக்கு திறமை வேண்டும்...அதோடு தெய்வ கடாட்சமும் வேண்டுமே! திறமை மிக்க மாணவர்களுக்கு கூட பணம், பிற வகைகளில் படிப்பில் தடை வரலாம். இவர்கள் தங்கள் பெற்றோருடன், நாகப்பட்டினம் மாவட்டம் தலை ஞாயிறு(திருக்கருப்பறியலுõர்) குற்றம் பொறுத்தநாதர் கோயிலுக்கு சென்று வரலாம். இங்குள்ள கல்வி தெய்வமான தட்சிணாமூர்த்தி கல்விக்கே தலைவராக கருதப்படுகிறார். தலைஞாயிறு தல என்பது இவரது செல்லப்பெயர். இவரது அருளால் தடையற்ற கல்வி கிடைக்கும்.

தல வரலாறு: ராவணனின் மகன் மேகநாதன், புஷ்பக விமானத்தில் பறந்தபோது, வழியில் தடைபட்டு நின்றான். பூமியிலிருந்த சிவாலயம் ஒன்றின் மேலாக பறந்ததால், தடை ஏற்பட்டதை அறிந்த அவன், அங்கே விமானத்தை இறக்கி, அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி சிவனை பூஜித்தான். விமானம் மறுபடியும் பறந்தது. மகிழ்ந்த மேகநாதன் அந்த அற்புதலிங்கத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்று தோற்றான். இதைக்கேட்ட ராவணன் இத்தல சிவனின் திருவடியில் விழுந்து, தன் மகனின் குற்றத்தை பொறுத்தருளுமாறு வேண்டினான். இறைவனும் அருள் செய்தார். எனவே இத்தல இறைவன் குற்றம் பொறுத்த நாதர் எனப்படுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !