உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வறண்ட வைகையில் ஏடுஎதிரேறிய விழா!

வறண்ட வைகையில் ஏடுஎதிரேறிய விழா!

திருவேடகம் : திருவேடகம் ஏழவார் குழலியம்மன், ஏடகநாதர்சுவாமி கோயிலில் நேற்று ஏடுஎதிரேறிய திருவிழா வறண்ட வைகை ஆற்றில் நடந்தது. நேற்று மாலை 6 மணிக்குமேல் கோயிலில் இருந்து அமைச்சர் குலச்சிறைநாயனார் குதிரை வாகனத்தில், விநாயகர் சுவாமி, திருஞானசம்பந்த சுவாமி பல்லக்கில் ஊர்வலமாக வந்து வைகை ஆற்றில் எழுந்தருளினர்.தண்ணீர் இல்லாததால், ஆறு அடிக்கு குழிதோண்டப்பட்டது. அதில் ஊற்றிய தண்ணீரில் தங்க ஏட்டை சப்பரத்தில் வைத்து நிகழ்ச்சி நடந்தது. புராணவரலாற்றை ஓதுவார் குருசாமிதேசிகர் விளக்கினார். திருஞானசம்பந்தர் சுவாமிக்கு பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சுமதி, ஊழியர் முத்துவேல் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !