அபிநவ வித்யா தீர்த்தரின் 25ம் ஆண்டு ஆராதனை!
ADDED :4044 days ago
மேற்கு மாம்பலம் : மேற்கு மாம்பலம் சிருங்கேரி ஜகத்குரு சங்கர மடத்தில், அபிநவ வித்யாதீர்த்தரின் 25ம் ஆண்டு ஆராதனை நடந்தது. மேற்கு மாம்பலம், கிருபா சங்கரி தெருவில் உள்ள, சிருங்கேரி சங்கர மடத்தில், சாரதா பீட, ௩௫வது பீடாதிபதி அபிநவ வித்யாதீர்த்த சங்கராச்சாரியாரின், 25ம் ஆண்டு ஆராதனை வழிபாடு நடந்தது.காலை 9:௦௦ மணிக்கு, சுவாமிகளின் பாதுகை பூஜையும், தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் நடந்தது. இரவு 7:௦௦ மணிக்கு, பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.