வத்தலக்குண்டு அய்யப்பன் கோயில் கும்பாபிஷேகம்
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் 56 ஆண்டு பழமை வாய்ந்த அய்யப்பன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன் தினம் முதல்கால யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நவக்கிரக ஹோமம், கோ பூஜை நடந்தது. அன்று மாலை பூர்ணாஹூதி, வாஸ்துசாந்தி, அங்கூரார்ப்பணம், கும்ப அலங்காரத்துடன் தீப ஆராதனை நடந்தது. நேற்று காலை 2ம் கால யாகபூஜையுடன் கும்பாபிஷேகம் வேள்விகள் துவங்கின. காலை 9.30 மணிக்கு கடம் புறப்பட்டு கோயி லை வலம் வந்தது. 10 மணியளவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் ஐயப்ப கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை வத்தலக்குண்டு கிளை அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தினர் செய்திருந்தனர். வேடசந்தூர்: குட்டம் கரட்டுப்பட்டியில் மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த முடிமைநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. குட்டம், கரட்டுப்பட்டி, தாசிரிபட்டி, சுக்காம்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, சிக்குபள்ளம் புதூர், புதுக்கோட்டை, புளியமரத்துக்கோட்டை, வெள்ளணம்பட்டி, திண்டுக்கல், மதுரை, கவுந்தம்பாடி பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கோயில் அறக்கட்டளை தலைவர் கந்தசாமி உட்பட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.* கூவக்காபட்டி வாத்தியார் புதூரில் மஹாகணபதி, காவேரியம்மன், காளியம்மன், மாரியம்மன், கருப்பணசாமி, நாகம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.