நவக்கிரக கிருஷ்ணன் கோயில் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி
ADDED :4045 days ago
மூணாறு :மூணாறில் ஸ்ரீ காளியம்மன் நவக்கிரக கிருஷ்ணன் கோயில் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணன் வேடமணிந்த மழலையர்களின் ஊர்வலம் நடந்தது. பழைய மூணாறில் பார்வதியம்மன் கோயிலில் இருந்து ஆரம்பித்த ஊர்வலம் கிருஷ்ணன் கோயிலில் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான சிறுவர்,சிறுமியர் கண்ணனாக வேடமிட்டு பங்கேற்றனர். கிருஷ்ணருக்கு பல்வேறு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தன.கோயில் வளாகத்தில் சிறுவர்கள் பங்கேற்ற பானை உடைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.