துவங்கியது நவராத்திரி : நாளை குத்துவிளக்கு பூஜை!
ADDED :4081 days ago
பொதட்டூர்பேட்டை : பொன்னியம்மன் கோவிலில், நேற்று முன்தினம், பிரவேச பலி பூஜையுடன், நவராத்திரி உற்சவம் துவங்கியது. நாளை மாலை, குத்துவிளக்கு பூஜை நடக்கிறது. பொதட்டூர்பேட்டை பொன்னியம்மன் கோவிலில், நேற்று முன்தினம், நவராத்திரி உற்சவம் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு, பிரவேச பலி பூஜை நடந்தது. நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. நவராத்திரியை ஒட்டி, வரும் 3ம் தேதி வரை, அம்மன் பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலிக்கிறார். நாளை, மாலை 6:00 மணிக்கு, 1,008 குத்து விளக்கு பூஜை நடக்கிறது. நவராத்திரியை ஒட்டி, திரளான பெண்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர். வரும் 3ம் தேதி, பகல் 12:00 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.