தசரா துவங்கியது: பக்தர்கள் குவிந்தனர்!
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், தசரா விழா நேற்று துவங்கியது. ஏராளமான பக்தர்கள், அம்பாளை தரிசனம் செய்தனர். செங்கல்பட்டில், 108 ஆண்டுகளாக, இந்துக்களின் பழமை வாய்ந்த கலாசார விழாவாக, தசரா திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, கடந்த 24ம் தேதி துவங்கிய விழா, வரும் அக்.,3ம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு, மாவட்டம் முழுவதும் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். செங்கல்பட்டு நகரில், சின்னக்கடை தசரா, ஜவுளிக்கடை தசரா, பூக்கடை தசரா மற்றும் பிரசித்தி பெற்ற ஏகாம்பரேஸ்வர் ÷ காவில், திரவுபதியம்மன் கோவில், சின்னம்மன் கோவில், ஓசூராம்மன் கோவில், எல்லையம்மன் கோவில், மேட்டுத் தெரு, பெரியநத்தம் ஆகிய பகுதிகளில், தசரா விழா கொண்டாடப்படுகிறது. இங்கு, நேற்று முன்தினம் இரவு, சின்னக்கடை தசராவில், ஆதிபராசக்தி; முத்துமாரியம்மன் கோவில் அருகில், கம்பாநதி ஆதிபராசக்தி; பூக்கடை தசராவில், பச்சையம்மன்; ஜவுளிக்கடை தசராவில், அம்பாள்; திரவுபதியம்மன் கோவில், சிம்ம வாகனம் சாமுண்டீஸ்வரி அம்மன்; ஆண்டாள்; ஆதிபராசக்தி ஆகிய ய்வங்களுக்கு, மலர்களால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. செங்கல்பட்டு, ஏ.எஸ்.பி., ஜார்ஜ் ஜோர்ஜ் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.