சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பவுர்ணமி பூஜை!
ADDED :4018 days ago
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. லட்சுமிநரசிம்ம பெருமாள் சுவாமிக்கு இளநீர், பன்னீர், சந்தனம், பால், தயிர், திருமஞ்சணம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.