உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் கோவில்களில் பூஜை நிறுத்தம்!

விருத்தாசலம் கோவில்களில் பூஜை நிறுத்தம்!

விருத்தாசலம்: சந்திர கிரகணத்தையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் பகல் 12:00 மணிக்கு மேல் பூஜைகள் நிறுத்தப்பட்டன. விருத்தாசலம் விரு த்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து,  பகல் 12:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அனைத்து பூஜைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர், 6:00 மணிக்கு மேல் தீர்த்தவாரி நடத்தப் பட்டு வழக்கம்போல் பூஜைகள் நடந்தன. மணவாளநல்லூர் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் பகல் 12:00 மணி முதல்  மூலவர் சன்னிதான நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து 6:00 மணிக்கு மேல் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !