உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் பகவன் நாமபோதேந்திராள் நாடகம்!

மதுரையில் பகவன் நாமபோதேந்திராள் நாடகம்!

மதுரை:மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் அக்., 11 மற்றும் ?? ம் தேதிகளில் மகாலட்சுமி பெண்கள் நாடக குழு சார்பில் ஸ்ரீ பகவன் நாம போதேந்திராள் நாடகம் நடைபெறுகிறது.இரவு 7 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், மனதை வருடும் இசையில் ராம நாமத்தின் மகத்துவத்தை ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டிய ஆச்சார்யாளின் வரலாறு நாடகமாக அரங்கேறுகிறது. பாம்பே ஞானம் இயக்குகிறார்.ராமநாம மகிமையை அனைவரும் உணரும் வகையில் அனுமதி இலவசம். விபரங்களுக்கு 95000 23788 ல் தொடர்பு ள்ளலாம் சொற்பொழிவு திருப்பரங்குன்றம், அக். 9--மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நித்தியானந்த சுவாமிலவாரு அறக்கட்டளை சார்பில் வள்ளலார் கருத்துக்களை பரப்பியவர் பொள்ளாச்சி மகாலிங்கம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. கல்லூரி முதல்வர் நேரு தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் பழனி வரவேற்றார். தியாகராஜர் கல்லூரி பேராசிரியர் மலர்விழி மங்கையர்க்கரசி பேசினார். பேராசிரியர்கள் விஷ்ணுசுபா, ஜெயகிருஷ்ணன், தமிழ்த்துறை தலைவர் நம்.சீனிவாசன் கலந்து கொண்டனர். பேராசிரியர் அழகேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !