உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகடி - திருப்பதி பாதயாத்திரை 10 ஆண்டுகளாக செல்லும் பக்தர்!

மாகடி - திருப்பதி பாதயாத்திரை 10 ஆண்டுகளாக செல்லும் பக்தர்!

பெங்களூரு: மாகடியிலிருந்து, திருப்பதிக்கு, பத்து ஆண்டுகளாக, பெண் பக்தர் பாதயாத்திரையாக செல்கிறார். கர்நாடக மாநிலம், மாகடியை சேர்ந்தவர் சாரதா சுரேஷ். இவர், திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர். கடந்த 10 ஆண்டுகளாக, தொடர்ந்து, பாதயாத்திரையாக திருப்பதிக்கு செல்கிறார்.கடந்த 2004ல், பெங்களூருவை சேர்ந்த நடராஜ், குருராஜ் குழுவினருடன் பாதயாத்திரையை துவக்கினார். அதன்பின், ஆண்டுதோறும், தவறாமல் குழுவினருடன் பாதயாத்திரையில் பங்கேற்கிறார். மாகடியிலிருந்து திருப்பதிக்கு, 350 கி.மீ., துாரம் உள்ளது. பாதயாத்திரையை, தினமும் அதிகாலை, 3:௦௦ மணிக்கு, இந்த குழுவினர் துவங்குகின்றனர். தினமும், 40 முதல், -50 கி.மீ., நடக்கின்றனர். இடையிடையே சிற்றுண்டி, உணவு சாப்பிடுவர். இரவில், ஏதாவது ஒரு இடத்தில் தங்கி, மறுநாள் அதிகாலையில் பயணத்தை துவங்குகின்றனர். இதற்காக, அனைத்து பொறுப்புகளையும், சாரதா ஏற்று கொண்டுள்ளார்.இந்த ஆண்டும், திருப்பதிக்கு பாதயாத்திரை செல்ல, சாரதா, குழுவினருடன் தயாராகி வருகிறார். நவ., 4ம் தேதி, மாகடியில், ௩௦௦ பேர் கொண்ட குழு புறப்படுகிறது. பெருமாளின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே, இவர்கள் பாதயாத்திரையாக செல்ல உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !