உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளலார் மன்றத்தில் சன்மார்க்க கொடி நாள்

வள்ளலார் மன்றத்தில் சன்மார்க்க கொடி நாள்

சங்கராபுரம் : சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் சன்மார்க்க கொடி நாள் விழா நடந்தது.வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மன்ற நிர்வாகிகள் வைத்திலிங்கம், நாராயணன், பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முத்துகருப்பன் வரவேற்றார். மன்ற பூசகர்கள் தமிழ்மணி அடிகள், சிவஞான அடிகள் முன்னிலையில் அகவல் படித்து உலக நலனிற்காக பிரார்த்னை நடந்தது.முன்னாள் ரோட்டரி தலைவர் மூர்த்தி சன்மார்க்க கொடி ஏற்றினார். அரிமா மாவட்ட தலைவர் வேலு, ஜனனி, நெடுஞ்செழியன், சுரேஷ், மாரிமுத்து, செட்டியந்தூர் சன்மார்க்க சங்க தலைவர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். சேகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !