ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே!
ADDED :4393 days ago
குருநானக் சீடர்களுடன் ஒரு கிராமத்திற்குச் சென்றார். அங்கிருந்த மக்கள் தங்களுக்குள் சண்டையிடுவதைக் கண்டார். அவர்களிடம் குருநானக், நீங்கள் எங்கும் போக வேண்டாம். இங்கேயே இருங்கள், என்று அந்த மக்களிடம் சொன்னார்.மற்றொரு கிராமத்தினர் குருநானக்கை அன்புடன்வரவேற்று மகிழ்ந்தனர். ஒற்றுமையாக வாழ்ந்த அவர்களிடம்,நீங்கள் எல்லோரும் வேறு வேறு இடத்திற்கு பிரிந்து செல்லுங்கள் என்றார். குருநானக் சொல்வதை புரிந்த கொள்ளாத மர்தனா என்ற சீடர், அதற்கு விளக்கம் கேட்டார்.சண்டையிடும் மனப்பான்மை கொண்டவர்கள் எங்கு போனாலும் அமைதி கெடும். அதனால், அவர்கள் எங்கும் போகவேண்டியதில்லை. ஆனால், ஒற்றுமையாய் வாழ்பவர்கள் பல இடங்களுக்குச் செல்வதால் பலருக்கும் நன்மையே உண்டாகும், என்றார்.