சுப்ரமணியர் சுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு!
கம்மாபுரம்: சி.கீரனூர் வள்ளி தெய்வாணை சமேத சுப்ரமணியர் சுவாமி கோவில் மண்டல பூஜை நிறைவு பெற்றது. கம்மாபுரம் அடுத்த சி.கீரனூர் வள்ளி தெய்வாணை சமேத சுப்ரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி நடந்தது. தொடர்ந்து நடந்த மண்டல பூ ஜையில், தினசரி மூலவருக்கு அபிஷேக ஆராதனை, அன்னதான நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதையெ õட்டி, காலை 5:00 மணிக்கு கும்பாபிஷேக பூர்த்தி யாகம், நவகிரகங்களுக்கு பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பகல் 11:30 மணிக்கு மூலவரு க்கு அபிஷேக ஆராதனை, அன்னதான நிகழ்ச்சி, மாலை 5:00 மணிக்கு வள்ளி தெய்வாணை சமேத சுப்ரமணியர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா குமார், முன்னாள் எம்.எல்.ஏ., ராமநாதன் செய் திருந்தனர்.