உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்லறைத் திருநாள் கிறிஸ்தவர்கள் வழிபாடு!

கல்லறைத் திருநாள் கிறிஸ்தவர்கள் வழிபாடு!

சேலம் : கல்லறைத் திருநாளான நேற்று, சேலம் தேவாலயங்களில் ஒட்டியுள்ள மயானங்களில், கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் சமாதிகளில், மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு நடத்தினர். ஆண்டு தோறும், நவம்பர், 2ம் தேதி கல்லறைத் திருநாளாக, கிறிஸ்தவர்கள் அனுசரித்து, அன்று, தங்களின் மூதாதையர்களுக்கு வழிபாடு மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், சேலம் குழந்தை ஏசு பேராலயத்தின் எதிரே உள்ள மயாவம், செவ்வாய்ப்பேட்டை, நெத்திமேடு ஜெயராணி பள்ளியின் எதிரே உள்ள மயானம் உட்பட்ட, 30க்கும் மேற்பட்ட மயானங்களில், கிறிஸ்தவர்கள், நேற்று காலை முதலே வழிபாடு நடத்தினர்.மாலையில், கல்லறைகளை அலங்கரித்து, அவற்றின் முன் ஊதுபத்தியை கொளுத்தியும், மெழுகுவர்த்தி ஏந்தியும், ஜெபம் செய்து வழிபட்டனர்.கிறிஸ்தவர்களின் இந்த கல்லறைத் திருநாள் வழிபாட்டை அடுத்து, அனைத்து தேவாலயங்கள், கல்லறைகள் அடங்கிய மயானங்களில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !