ஆதி அண்ணாமலையார் கோயிலில் பறவைகளுக்கு அன்னாபிஷேகம்
ADDED :3985 days ago
கம்பம்: சுருளி அருவியில் ஆதி அண்ணாமலையார் கோயிலில் நேற்று நடைபெற்ற அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பறவைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. சுருளி அருவியில் நுழையும் இடத்தில் உள்ளது பழமையான ஆதி அண்ணாமலையார் கோயில். இங்கு நேற்று காலை சிவனடியார் முருகன் தலைமையில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. பால், தயிர், வில்வபொடி, திருமஞ்சனம் உள்ளிட்ட பல சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சுருளியாற்றில் மீன்களுக்கும், பறவைகளுக்கும் உணவு வழங்கப்பட்டது. இது பற்றி இங்குள்ள சிவனடியார் முருகன் கூறுகையில், ‘ இது பறவைகளுக்கும், பிற உயிரினங்களுக்கும் உணவு வழங்குவதற்காக சிவாலயங்களில் நடத்தப்படும் சிறப்பு அபிஷேகம். நேற்று சுருளியில் இந்த அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது’ என்றார்.