பக்தர்கள் வசதிக்காக ..பம்பையில் ரயில் டிக்கெட் கவுண்டர் திறப்பு!
சபரிமலை: பக்தர்கள் வசதிக்காக பம்பையில் முன்பதிவு வசதியுடன் கூடிய ரயில்வே டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு பக்தர்கள் ரயிலில் வருவதையே அதிகமாக விரும்புகின்றனர். நாட்டின் எந்த பகுதியில் இருந்து வந்தாலும் செங்கன்னுார் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து இரண்டரை மணி நேரம் பஸ்சில் பயணம் செய்தால் பம்பை வந்து விடலாம். சீசன் காலங்களில் எல்லா ரயில்களும் செங்கன்னுார் நின்று செல்லும் வகையில் ரயில்வே வசதி செய்துள்ளது. கோட்டயம் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து எருமேலி வழியாகவும் பம்பை வரமுடியும். பம்பையில் கணபதிகோவிலின் வலது பக்கத்தில் அனைத்து வசதிகள் கூடிய ரயில்வே டிக்கெட் கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7.30 மணிக்கு அரை மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் பக்தர்கள் சிரமப்பட்டனர்.