சோமநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை உற்சவம்
ADDED :3986 days ago
பள்ளிப்பட்டு: வெளியகரம் சோமநாதீஸ்வரர் மலைக்கோவிலில், இன்று கார்த்திகை மூன்றாம் திங்களை ஒட்டி, சிறப்பு உற்சவம் நடைபெற உள்ளது. பள்ளிப்பட்டு அடுத்த, வெளியகரம் மலை மீது மரகதவள்ளி உடனுறை சோமநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இன்று காலை 10:00 மணிக்கு, மலைக்கோவிலில், மூலவர் சோமநாதீஸ்வரர் மற்றும் மரகதவள்ளி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் நடைபெறுகிறது. மாலை, 6:00 மணிக்கு, 108 நாமாவளியும், மகா தீபாராதனையும் செய்யப்படும். உற்சவத்தை ஒட்டி, காலை முதல், மாலை வரை, கோவில் நடை திறந்திருக்கும். மூன்று மற்றும் நான்காம் திங்கள் கிழமைகளில், மலைக்கோவிலில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய குவிந்திருப்பது வழக்கம்.