தினசரி கணபதி ஹோமம்!
ADDED :4159 days ago
ஈரோடு மாவட்டம், கரும்பாறையில் சங்கடஹர அவதாரக் கோலத்தில் விநாயகர் சிலை உள்ளது. இது பார்வதிதேவி, விநாயகர் மடியில் அமர்ந்து தவம் செய்யும் கோலம். பொதுவாக விநாயகர் கோயில்களில் விசேஷ காலங்களில் மட்டுமே கணபதி ஹோமம் நடத்தப்படும். ஆனால் இக்கோயிலில் தினசரி கணபதி ஹோமம், கஜ பூஜை, நிர்மால்ய பூஜைகள் செய்யப்படுகின்றன. தன்வந்திரி பெருமாளுக்குத் தனி சன்னிதி இங்குள்ளது.