உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளியங்கிரி மலையில் இன்று மகா தீபம்!

வெள்ளியங்கிரி மலையில் இன்று மகா தீபம்!

பேரூர் : கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, கோவை வெள்ளியங்கிரி மலையில், இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது. ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருநாள் அன்று, கோவை வெள்ளியங்கிரி ஏழாவது மலையின் மீது விளக்கு ஏற்றுவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டு திருவண்ணாமலையில் நடக்கும் மகா தீபத்தைபோல, கோவை வெள்ளியங்கிரி மலையிலும் மகா தீபம் ஏற்ற திட்டமிட்டனர். தொடர்ந்து, திருவண்ணாமலையில் பூஜை செய்யப்பட்ட கொப்பரை, நேற்று முன்தினம் கோவை கொண்டு வரப்பட்டது. கோவை பேரூரில் இருந்து நேற்று காலை, கொப்பரை வெள்ளியங்கிரி மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தற்போது, கொப்பரை வெள்ளியங்கிரியின் ஏழாவது மலையில் தயார் நிலையில் உள்ளது. இன்று மாலை ஆறு மணிக்கு, மகா தீபம் மலையில் ஏற்றப்படுகிறது. இதனை காருண்யா நகர், சாடிவயல் சோதனைச்சாவடி அருகில் நின்று பார்க்கலாம். இதை பார்க்க ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !