அச்சனம்பட்டியில் கோயில் திருவிழா!
ADDED :3955 days ago
நிலக்கோட்டை அருகே அச்சனம்பட்டியில் உள்ள கணபதி, பெத்தன்னசாமி, வீரசின்னம்மாள் கோயிலில் கார்த்திகை மாத திருவிழா நடைபெற்றது. விழாவில் காசி, ராமேஸ்வரம், சுருளித்தீர்த்தம் உட்பட பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. பின்னர் விக்னேஷ்வர பூஜை, சோமகும்ப வேதிகார்ச்சனை, தத்துவார்ச்சனை மற்றும் கோபூஜைகள் முடிந்து கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கணபதி கோயில் முன் உள்ள மூசிக வாகனத்திற்கு சிறப்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. எஸ்.தும்மலப்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, மல்லணம்பட்டி, குளத்துப்பட்டி கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான வசதிகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.