பரமக்குடி ஐயப்பன் கோயிலில் ஏக தின லட்சார்ச்சனை விழா!
ADDED :3973 days ago
பரமக்குடி : பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள, தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில், ஏக தின லட்சார்ச்சனை விழா நடந்தது.
இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, அனுக்கையுடன், ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 9 மணி முதல் மூலவர், உற்சவருக்கு, ஐயப்ப சுவாமியின் திவ்ய நாமங்கள் லட்சம் முறை அர்ச்சனைசெய்யப்பட்டன. சிவஸ்ரீகோபிநாத்சர்மா, ஆலய அர்ச்சகர் சீனிவாசஅய்யர் உள்ளிட்டோர் லட்சார்ச்சனையை நடத்தி வைத்தனர்.பின்னர், மூலவருக்கு மலரபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தர்மசாஸ்தா சேவா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.