ஆலப்பாக்கத்தில் துலாபார விழா!
ADDED :3944 days ago
மரக்காணம்: ஆலப்பாக்கம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் துலாபார விழா நடந்தது. மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இ.சி.ஆர். சாலை, ஆலப்பாக்கம் கிராமத்தில் ஆதிகேசவ பெருமாள்கோவிலில் 15ம் ஆண்டு துலாபார விழா நடந்தது. இதனையொட்டி காலை 7 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் எம்பெருமானார் பக்தசமாஜம் சார்பில் பஜனை ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு ராமானுஜதாசர் தலைமையில் சிறப்பு சிறப்பு யாகபூஜை நடந்தது. பின்னர் நடந்த துலாபார நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த குடும்பத்தினர், குழந்தையை துலாபாரத்தில் வைத்து எடைக்கு எடையாக நாணயங்களை நிறுத்தி, கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினர். விழாவில் முன்னாள் தலைவர் பெருமாள், பஜனை குழுவைச் சேர்ந்த ராஜேந்திரன், ராமச்சந்தின், குணசேகரன், செல்வபெருமாள் பங்கேற்றனர்.