நடராஜர் காலடியில் கோணலாக கிடப்பவன்!
ADDED :4326 days ago
நடராஜரின் வலது கால், முயலகன் என்பவன் மீது இருக்கிறது. இவனை, அபஸ்மாரன் என்பர். இவன் வளைந்து நெளிந்து, அஷ்ட கோணலாகப்படுத்திருப்பான். அபஸ்மாரம் என்றால், வளைந்து நெளிதல் என்பர். காக்கா வலிப்பு நோய் வந்தவருக்கு, கையும், காலும் இழுத்து, எந்த நிலையில் தரையில் கிடப்பாரோ, அப்படி ஒரு நிலை. முசலகம் என்றால், காக்கா வலிப்பு!.இதனால், அவன், முசலகன் என்றாகி, தமிழில் முயலகன் ஆனான். இவன்ஆணவத்தைக் குறிப்பவன். மனிதன் தன்னிடமுள்ள அகங்காரத்தை, நடராஜர் காலில் இட்டு மிதித்திருப்பது போல், தனக்குள் புதைத்துக் கொள்ள வேண்டும்.அது வெளியே தலைகாட்ட அனுமதிக்கக் கூடாது என்பது இதன் தத்துவம்.