தலைசிறந்த பொக்கிஷம்!
உலகத்திலேயே சிறந்தபொக்கிஷம் எது என்றால், தங்கப்புதையல், வைரவைடூரியங்கள் என்று குறிப்பிடு வோம். ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தம் நண்பர் ஒருவரிடம், தோழரே! மனிதன் பொக்கிஷமாக கருத வேண்டியதில் மிகச்சிறந்ததை உமக்கு அறிவிக்கட்டுமா? என்றார்கள்.நண்பர் ஆவலுடன் அவரை நோக்க, நல்ல பெண் தான் மிகச்சிறந்த பொக்கிஷம். கணவர்அவளைப் பார்த்தால் அவள் அவரை மகிழ்விப்பாள். அவர் கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள். அவர் அவளை விட்டும் சென்று விட்டால், அவரைப் பாதுகாத்துக் கொள்வாள், என்றார்கள்.இதன் பொருள் என்ன?மனைவி எந்நேரமும் சிடுசிடுவென முகத்தை வைத்துஇருந்தால், அவளை பார்க்கும் கணவருக்கு என்ன நினைப்பு ஏற்படும்?இவளைப் போய் நிக்காஹ் செய்தோமே, அல்லாஹ் எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனையை கொடுத்தான், என்று தோன்றும்! அதே நேரம், அவள் கடினமான சூழலிலும் கூட இனிய முகம் காட்டினால், வெளியே செல்லும் கணவர் வெற்றியுடன் திரும்ப மாட்டாரா என்ன! கணவர் கட்டளையிட்டால் ஏற்றுக் கொள்வது என்பது, பெண்ணடிமைத்தனம் என இப்போது புதிய வியாக்கியானம் சொல்லப்படுகிறது. இந்த பொன்மொழியை அப்படி எடுத்துக் கொள்ளக்கூடாது. கணவர் சொன்னதை ஏற்பதன் மூலம் அனுசரிப்புத்தன்மை ஏற்படும். ஒருவேளை, கணவரது சொல் பிற்காலத்தில் துன்பத்தை தருமென்றால் சமயம் பார்த்து, இனிய முகத்துடன் எடுத்துச் சொன்னால் அவர் புரிந்து கொள்ளலாம். தன் திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம்.அவர் அவளை விட்டும் சென்று விட்டால் அவரைப் பாதுகாப்பாள் என்ற வாசகத்தில் உள்ள அவர் என்ற வார்த்தை, கணவர் இல்லாத நேரத்தில்அவருக்காகவே நான்இருக்கிறேன் என்ற கற்பு நிலையைப் பாதுகாப்பது என பொருள் கொள்ள வேண்டும்.