உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தவறு செய்பவர்களை திருத்த வழி!

தவறு செய்பவர்களை திருத்த வழி!

நம் கண்முன்னால் இன்று எத்தனையோதவறுகள் நடக்கின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்துவது நம் கடமை. தவறு செய்வோரைத் திருத்தும்போது, அவர்களால் நமக்கு ஆபத்தும் வரலாம் இல்லையா? எனவே சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரித்து, தவறு செய்பவர்களைத் திருத்த முடியும் என்கிறார்கள் நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள். உங்களில் யாராவது ஒருவர் ஒரு தவறைக் கண்டால் அதைத் தமது கரத்தால் மாற்றட்டும். அது இயலாவிட்டால் தமது நாவால் மாற்றட்டும். அதுவும் இயலாவிட்டால் உள்ளத்தால் வெறுத்து விலகி விடட்டும், என்பது நபி மொழி.தவறு செய்வதை நம் கரத்தால் தடுத்து நிறுத்தும் போது எதிராளி நம்மிடம் சண்டை போடலாம். அப்படி முடியாத பட்சத்தில், அவரைக் கண்டித்தோ, இனிய வார்த்தைகள் மூலம்புத்திமதி சொல்லியோ திருத்த முயற்சிக்கலாம். அது முடியாவிட்டால், அந்த நபருடன் எந்தஉறவும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று விலகிவிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !