உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை டிக்கெட் இனி போஸ்ட் ஆபிசில்...!

திருமலை டிக்கெட் இனி போஸ்ட் ஆபிசில்...!

திருப்பதி: திருமலை திருப்பதி பெருமாளை தரிசிக்க இதுவுரை ஆன்லைன் டிக்கெட்டுகள் மட்டுமே இருந்து வந்தது.இந்த டிக்கெட்டை பெறுவதில் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் மற்றும்  இண்டர்நெட் பற்றி தெரியாதவர்கள் டிக்கெட் எடுப்பதில் சிரமப்பட்டு வந்தனர்.அவர்களுக்கு வசதியாக இப்போது போஸ்ட் ஆபிசில் டிக்கெட் வழங்கப்படுகிறது.முதல் கட்டமாக திருப்பதி போஸ்ட் ஆபிசில் இன்று துவங்கப்பட்டது.இது படிப்படியாக சீமந்திரா மற்றும் தெலுங்கானா பகுதி முழுவதும் விரிவுபடுத்தப்படும். போஸ்ட்ஆபிஸ் மூலமாகவே அறைகள் ஒதுக்கீடு மற்றும் விசேஷ தர்ஷன் ஒதுக்கீடு செய்வது பற்றி ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !