உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதகளி நடத்தினால் பிள்ளை பாக்கியம்!

கதகளி நடத்தினால் பிள்ளை பாக்கியம்!

கேரள மாநிலம் செங்கனூருக்கு அருகில் உள்ளது திருவல்லா கிராமம். இங்கு அமைந்துள்ள மகாவிஷ்ணு கோயில் வெகு பிரசித்தம்! இந்த மகாவிஷ்ணுவை.  வல்லபர் என்று அழைக்கிறார்கள் பக்தர்கள் இங்கே உள்ள பெருமாளின் திருமுகத்தைத் தரிசிக்கும்போது அவரின் திருவடியைத் தரிசிக்க இயலாது; அதேபோல், திருவடி தரிசனம் செய்யும்போது திருமுகத்தைக் காண இயலாது. அப்படியொரு அமைப்பில் உள்ளது கருவறை.

இன்னொரு சிறப்பு. இங்கே பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. ஆனால் அர்ச்சகர்கள் அதை அணிந்துகொள்ளுதல் கூடாதாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு கதகளி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து விஷ்ணுவை வேண்டிக்கொண்டால், விரைவில் பிள்ளைச் செல்வம் கிடைக்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !